மத்ரசா கல்வியை நெறிப்படுத்த 9 பேர் கொண்ட குழு! - sonakar.com

Post Top Ad

Monday, 6 May 2019

மத்ரசா கல்வியை நெறிப்படுத்த 9 பேர் கொண்ட குழு!


இலங்கையில் இயங்கும் மத்ரசாக்களில் சமய விவகாரங்களுடன் ஏனைய பாடங்களையும் கற்பிக்கும் வகையில் மத்ரசா கல்வியை நெறிப்படுத்துவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் அதற்கான முன்மொழிவு முஸ்லிம் விவகார அமைச்சரினால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அமைச்சரினால் நியமிக்கப்படும் 9 பேர் கொண்ட குழு ஸ்ரீலங்கா மத்ரசா கல்விச் சபையாக இயங்குவதுடன் முஸ்லிம் விவகார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் எனவும் மத்ரசாக்களில் புகட்டப்படும் பாடங்களை நெறிப்படுத்தல், கண்காணித்தல், அபிவிருத்தி செய்தல் போன்ற பணிகள் இக்குழு ஊடாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற அங்கீகாரம் பெற்றதும் இது சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment