தவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 April 2019

தவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு!


பொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் பள்ளிவாசல்களைத் தடை செய்யக் கோரி பிராந்திய டி.ஐ.ஜி தம்மிக விஜேசேகரவிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளது பொலன்நறுவ பள்ளிவாசல்கள் சம்மேளனம்.


29 பள்ளிவாசல் நிர்வாகங்கள் இணைந்து குறித்த மனுவை கையளித்துள்ளதோடு 100 வருடங்களுக்கு மேல் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த பிரதேசத்தில் தவ்ஹீத் எனும் பெயரில் தோன்றிய அமைப்பின் வருகையின் பின்னரே பிரதேசத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவானதாகவும் இப்பின்னணியில் தற்சமயம் பாரிய அசெகளரியம் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலன்நறுவயில் மாத்திரமன்றி நாட்டின் அனைத்து பாகங்களிலும் தவ்ஹீத் அடையாளத்துடன் , பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கும் நிலையங்கள் தடை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

Zumar said...

All mosque should join this

Ghouse said...

Fear Allah not just follow the path of people who betray you. We are one Umma.

Post a comment