
வடபுலத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்த இந்தியா, தென் பகுதியில் மாத்தறையிலும் 50 வீடுகளை கட்டிக்கொடுக்க முன் வந்துள்ளது.
இதற்கான அடிக்கல் நடு விழாவில் நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான வீடுகள் 'தமிழர்களுக்கு' மாத்திரமே என புலம் பெயர்ந்து வாழும் பிரிவினைவாத அமைப்புகள் பிரச்சாரம் செய்து வந்திருந்தமையும் மத்தளை விமான நிலையத்தை கையகப்படுத்திக் கொண்டுள்ள நிலையில் மாத்தறையில் இந்தியா வீடு கட்டிக் கொடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment