
தமது கடமை நேரத்தில் அரச வைத்தியசாலைக்கு சமூகமளிக்காது தனியார் வைத்தியசாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள மூன்று வைத்தியர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது சுகாதார அமைச்சு.
மாவனல்லை, வலபென, கொஸ்கொட பகுதிகளிலேயே இவ்வாறு கடமை மீறும் வைத்தியர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்து விட்டும் தமது தனியார் வைத்திய சேவையை நடாத்தி வந்திருந்தமை குறித்து கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment