பிரச்சினைகளைத் தீர்க்க 2 வருடங்கள் தேவை: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

பிரச்சினைகளைத் தீர்க்க 2 வருடங்கள் தேவை: பொன்சேகா


இலங்கையில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து ஒரு வாரமாக பல கைதுகள் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன.


இந்நிலையில், தீவிரவாத அமைப்பு மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு செயற்பட்டிருப்பதாகவும் இந்தப் பிரச்சினை நினைத்தவுடன் தீர்த்துவிட முடியாது எனவும் தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா. இப்பின்னணியில் இப்பிரச்சினையை முற்றாக அகற்ற ஆகக்குறைந்தது 2  வருடங்களாவது தேவைப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பிரதான சந்தேக நபர்கள் இன்று கைதாகியுள்ளதோடு சஹ்ரான் மற்றும் இரு சகோதரர்களும் மேலும் ஒரு முக்கிய நபரான நியாசும் உயிரிழந்துள்ளமை தற்போது உறுதியாகியுள்ளதுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment