புத்தளம் குப்பை பிரச்சினை இனி ஜனாதிபதியின் கையில்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Friday, 29 March 2019

புத்தளம் குப்பை பிரச்சினை இனி ஜனாதிபதியின் கையில்: சம்பிக்க


புத்தளம் கழிவு முகாமைத்துவ மைய நிர்மாணப் பணிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் அத்துடன் தனது அமைச்சின் பொறுப்பு முடிந்து விட்டதாகவும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.


வனாத்தவில்லுவில் உருவாகியுள்ள குறித்த மையத்தினை இயக்குவதா இல்லையா என்ற அரசியல் தீர்வினை இனி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் கூடி ஆராய்ந்து முடிவெடுக்கலாம் எனவும் அதற்கும் தனக்கும் தொடர்பில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வனாத்தவில்லுவில் குறித்த மையம் உருவாவதற்கு புத்தளம் பகுதியிலிருந்து எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே எதிர்ப்பதாக தொடர்ந்தும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment