ரிசாதின் சொத்துக்களை ஆராயுமாறு ல.ஊ.ஆவில் முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Saturday, 23 March 2019

ரிசாதின் சொத்துக்களை ஆராயுமாறு ல.ஊ.ஆவில் முறைப்பாடு


யுத்த காலத்தில் 'சொப்பிங் பேக்' ஒன்றுடன் வெளியேறி வந்ததாக அடிக்கடி தெரிவிக்கும் நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் இருக்கும் சொத்து விபரங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு.


கடந்த சில தினங்களுக்கு முன்பாக நெத் எப் எம் வானொலியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போது இக்கேள்விக்கு பதிலளிக்காது சென்றதன் பின்னணியில் இம்முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவிக்கிறது.

இதேவேளை, ரிசாத் பதியுதீனும் நீண்ட காலமாக தாம் இவ்வாறே அகதியாக வெளிக்கிளம்பி வந்ததாக பகிரங்கமாக தெரிவித்து வருகின்றமையும் அவ்வப்போது சில நபர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment