அக்குறணையில் வாகன விபத்து; நால்வர் காயம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 March 2019

அக்குறணையில் வாகன விபத்து; நால்வர் காயம்


அக்குறணை எட்டாம் மைல் கல் என்கின்ற இடத்தில் லொரியொன்று தடம்புரண்டத்தில்  விபத்துக்குள்ளாகி  நான்கு பேர் அக்குறணை சியா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்


அலவத்துக்கொடப் பொலிஸ் பிரிவில்  அக்குறணை எட்டாம் மைல் கல் என்கின்ற இடத்தில் ஏ  9 பிரதான வீதியில்  குருகொட பிரதேசத்திற்குச் செல்லும் சந்தியில் நெல் லொரியொன்று  தடம்புரண்டதில் பாதையில் நின்று இருந்த இரு  மோட்டார் சைக்கில் இரு முச்சக்கர வண்டிகள் பாதிப்புற்றுள்ளதுடன் நான்கு பேர் காய முற்ற நிலையில் அக்குறணை சியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தசச் சம்பவம் இன்று காலை 10.30 மணி அளவில் இடம்பெற்றது.

லொரி சாரதியுடன் ஏனைய வாகனங்களில் நின்று இருந்த மூன்று நபர்களே இந்த விபத்தின் போது காயத்திற்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடம் புரண்டுள்ள லொரியின் கீழ் இரு மோட்டார் சைக்கில்கள் மற்றும் முச்சக்கர வண்டி  ஒன்றும் முற்றாக சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் ஒரு பழக்கடை, மின் கம்பம் என்பன இந்த விபத்தின் போது பாதிக்கப்பட்டுள்ளன.  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி யொன்றை மோதிய பின்னரே இந்த லொரி கட்டுப்பாட்டை இழந்து ஏனைய வாகனங்களின் மேல் தடம்புரண்டு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நெல்லொரி அநுராதபுரத்தில் இருந்து அம்பதென்ன என்ற இடத்துக்கு நெல் ஏற்றி வந்த சமயத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை அலவத்துக் கொட பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

-இக்பால் அலி

No comments:

Post a Comment