வத்தளை: ஆடை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து - sonakar.com

Post Top Ad

Sunday, 24 March 2019

வத்தளை: ஆடை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து


வத்தளை நகரில் இயங்கி வரும் ஆடை வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாகியுள்ளதையடுத்து நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என வழமை போன்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, தீயணைப்புக்கான முயற்சிகள் தாமதமானதால் பாரிய அளவு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ASB பெஷன் எனும் பெயரில் இயங்கிய பிரதேச சிங்கள வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தகம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment