மொட்டுச் சின்னத்தில் தான் 'வேட்பாளர்': மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 March 2019

மொட்டுச் சின்னத்தில் தான் 'வேட்பாளர்': மஹிந்த!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்கப் போகும் அல்லது களமிறக்கப் போகும் ஜனாதிபதி வேட்பாளர் பெரமுனவின் மலர் மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவார் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


பெரமுனவிலிருந்தே வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என பசில் ராஜபக்ச தெரிவிக்கின்ற போதிலும் கடந்த ஒக்டோபரில் மலர்ந்த மைத்ரி - மஹிந்த உறவின் பின்னணி குறித்த சந்தேகமும் நிலவி வருகிறது.ஸ்ரீலசுக மைத்ரிபாலவை தமது வேட்பாளராக அறிவித்துள்ள அதேவேளை பெரமுன வேட்பாளரின் பெயரை இதுவரை அறிவிக்காமல் தொடர்வதுடன் மஹிந்த இன்று இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment