கொழும்பு கோட்டக் கல்விக் காரியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி - sonakar.com

Post Top Ad

Monday, 11 March 2019

கொழும்பு கோட்டக் கல்விக் காரியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி


கொழும்பு கோட்டக் கல்விக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் மத்திய கொழும்பு பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 5,6ஆம் திகதிகளில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கொழும்பு கோட்டக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர் கே.ஆர். பிரேமதிலக தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கொழும்பு, அல்ஹிதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான எம்.ஸீ. பஹார்தீன் பிரதம அதிதியாகவும் வலயக் கல்வி விளையாட்டுத் துறைப் பணிப்பாளர் எம்.ஏ.கே.பி. விக்கிரமரத்ன கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் ஆண்கள் பாடசாலை பிரிவில் முதலிடத்தை மருதானை சென் ஜோன்ஸ் கல்லூரியும் இரண்டாம் இடத்தை கொழும்பு ஸாஹிரா கல்லூரியும் மூன்றாம் இடத்தை ஹமீத் அல்ஹுஸைனி கல்லூரியும் பெற்றுக் கொண்டன. பெண்கள் பாடசாலை பிரிவில் முதலிடத்தை பௌத்த மகளிர் மகா வித்தியாலயமும் இரண்டாம் இடத்தை சென் ஜோன்ஸ் மகளிர் கல்லூரியும் மூன்றாம் இடத்தை சென் ஏன்ட்ஸ் மகளிர் கல்லூரியும் பெற்றுக் கொண்டன.

-ஜெம்ஸித்

No comments:

Post a comment