செயற்கை மழை திட்டம் இடை நிறுத்தம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 March 2019

செயற்கை மழை திட்டம் இடை நிறுத்தம்!


காசல்ரே மற்றும் மவுசகலே பகுதிகளில் செயற்கை மழையை உருவாக்கும் திட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கிறது இலங்கை மின்சார சபை.


கடந்த வார இறுதியில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியினூடாக ஒரு மணி நேர செயற்கை மழை பெறப்பட்டிருந்த போதிலும் தற்போதயை மேகங்களில் போதியளவு ஈரப்பதன் இல்லாமை காரணமாக திட்டத்தை இடை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தினை செயற்படுத்த சுமார் 3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment