மஹிந்தவின் 19 நாள் கணக்கு! - sonakar.com

Post Top Ad

Tuesday 12 March 2019

மஹிந்தவின் 19 நாள் கணக்கு!


ஒக்டோபர் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் பிரளயத்தினால் தமது தரப்பு 52 நாட்கள் ஆட்சியிலிருந்ததாக தெரிவிக்கப்படுவது தவறு எனவும் முறையாகப் பார்த்தால் வெறும் 19 தினங்களே ஆட்சியை நிம்மதியாக முன்னெடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அந்த 19 தினங்களுக்குள் மக்களுக்குப் பயன்தரும் எண்ணற்ற சலுகைகளைத் தாம் அறிவித்ததாகவும் நவம்பர் 14ம் திகதி அரசு முடக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கிறார்.


எரிபொருள் விலை குறைப்பு, விவசாயிகளுக்கான சலுகைகள், 1000 மில்லியன் டொலர் பெறுமதியான இறக்குமதி என தாம் பல திட்டங்களை முன்னெடுத்ததாகவும் எனினும் ஐக்கிய தேசியக் கட்சி  - தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து முன்னெடுத்த சூழ்ச்சியினால் மேலதிக பணிகளை செய்ய முடியாது போனதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment