100 கிலோ ஹெரோயினுடன் ஈரானியர் 9 பேர் கைது - sonakar.com

Post Top Ad

Sunday, 24 March 2019

100 கிலோ ஹெரோயினுடன் ஈரானியர் 9 பேர் கைதுஇலங்கையின் தென்பகுதி கடல் எல்லையில் படகொன்றில் போதைப் பொருள் கடத்தி வந்ததாக தெரிவிக்கப்படும் ஈரானியர் 9 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.சுமார் 1 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் இதன் போது கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன் பொலிஸ், விசேட அதிரடிப்படை, கடற்படையின் கூட்டு நடவடிக்கையில் இக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

100 கிலோ கைப்பற்றப்பட்ட போதிலும் மேலும் 500 கிலோ கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment