மார்ச் முதல் சுருக்கு வலைக்கான அனுமதிப்பத்திரம் - sonakar.com

Post Top Ad

Tuesday 26 February 2019

மார்ச் முதல் சுருக்கு வலைக்கான அனுமதிப்பத்திரம்


திருகோணமலை மாவட்டத்தில் சுருக்கு வலை பயன்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல்வளதுறை அமைச்சர் ஹரிசன் தெரிவித்தார்.


திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஏற்பாட்டில் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் செவ்வாய்கிழமை மாலை மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சுருக்கு வலை பயன்படுத்துவதற்கான அனுமதி பத்திரம் ஒவ்வொரு வருடமும் திருகோணமலை மாவட்ட மீன்பிடி திணைக்களத்தால் வழங்கப்பட்ட போதும் இந்த வருடத்துக்கான அனுமதி பத்திரம் இதுவரை வழங்கப்படவில்லை என இதன்போது மீனவ சங்க பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இவர்களின் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக அனுமதி பத்திரத்தை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியதோடு அனுமதிப்பத்திரம் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என இதன்போது உறுதியளித்தார்.

மேலும் மீனவ பிரதேசங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரட்சனைகள் சிலவற்றுக்கு நிரந்தர தீர்வு காண பல மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடவேண்டியுள்ளதால் விரைவில் திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகவும் அதற்குரிய ஏற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மீன்பிடி திணைக்கள பிரதி பணிப்பாளர் நாயகம் தேசிய நீரியல் வள அபிவிருத்தி முகாமை(நாரா) பணிப்பாளர் கிண்ணியா, திருகோணமலை ஜமாலியா, குச்செவெளி, புல்மோட்டை பிரதேச மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

-Sabry

No comments:

Post a Comment