பிரபல கல்விமான் அல்ஹாஜ் எம் எஸ் ஏ. வாஹித் காலமானார் - sonakar.com

Post Top Ad

Friday 15 February 2019

பிரபல கல்விமான் அல்ஹாஜ் எம் எஸ் ஏ. வாஹித் காலமானார்


பிரபல கல்விமானும் ஓய்வு பெற்ற அதிபருமான அல்ஹாஜ் எம் எஸ் ஏ. வாஹித் (வயது - 93) நேற்று காலமானார்.

இவர் கம்பளை ஸாஹிரா கல்லூரியின் பட்டதாரி ஆசிரியராகவும் மாவனெல்லை ஸாஹிராக் கல்லூரி  மற்றும் ஹெம்மாத்தகம அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் மிக நீண்டகாலமாக அதிபராக பணியாற்றி நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் உருவாக பங்களிப்பு செய்த ஒருவர்.

க. பொ. த உயர் தர பரீட்சையில் தர்க்கவியல் பாடத்தை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய இவர் மாவனெல்லை ஸாஹிராக் கல்லூரி மற்றும் ஹெம்மாத்தகம அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்தின் இன்றைய வளர்ச்சியின் மைல் கல்லாக கருதப்படுபவர். கல்வித்துறையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பிரதேச காதி நீதவானாகவூம் சேவையாற்றி வந்தார்.



தர்கா நகர் அல் ஹம்றா கல்லூரியின் பழைய மாணவரான இவர் வித்தியோதய பல்கலைக்கழகத்தில் கற்று வெளியேறிய கேகாலை மாவட்டத்தின் முதல் பட்டதாரி ஆவார்.

ஹாஜியானி ஜெய்னம்பு நாச்சியின் கணவரும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையூமான இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் நவமணி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என். எம். அமீனின் தாய் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா ஹெம்மாத்தகம தும்புளுவாவெவ இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு 2019. 02. 16ஆம் திகதி காலை 10 மணிக்கு தும்புளுவாவ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

-SMMF

No comments:

Post a Comment