மைத்ரி கொலைச் சதி: நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 January 2019

மைத்ரி கொலைச் சதி: நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்ட முன்னாள் டி.ஐ.ஜி நாலக டிசில்வாவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் உளவாளியும் சர்ச்சைப் பேர்வழியுமான நாமல் குமாரவுடன் இது குறித்து உரையாடிய ஆதாரத்தைக் கொண்டே நாலக டி சில்வா மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி போதிய அக்கறை காட்டவில்லையென மைத்ரி குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நிலையில் புதிய அமைச்சரவையில் சட்ட-ஒழுங்கினைத் தன் வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment