வேறு இடங்களிலும் சிலை உடைப்பு: மாவனல்லை இளைஞர்களுக்கு மேலும் சிக்கல்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 January 2019

வேறு இடங்களிலும் சிலை உடைப்பு: மாவனல்லை இளைஞர்களுக்கு மேலும் சிக்கல்!


மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்பில் தொடர்பு பட்டிருப்பதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாவனல்லை இளைஞர்களுக்கு வேறு இடங்களிலும் சிலை உடைப்புகளில் தொடர்பிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


கம்பளை, பொல்கஹவெல உட்பட மேலும் சில இடங்களிலும் குறித்த குழுவினர் புத்தர் சிலைகளை சேதப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுவதுடன் இப்பின்னணியில் எதிர்வரும் 9ம் திகதி பொல்கஹவெல நீதிமன்றிலும் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்படுவதற்கு இன்று மாவனல்லை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதான சந்தேக நபர்கள் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் ஏனைய எழுவருக்கும் 16ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment