மத்திய கிழக்கு செல்லும் வீட்டுப் பணிப்பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 13 January 2019

மத்திய கிழக்கு செல்லும் வீட்டுப் பணிப்பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!


இலங்கையிலிருந்து மத்திய கிழக்குக்கு வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் தேடிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


ரிசானா நபீக்குக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து இது தொடர்பில் பாரிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு இலங்கைப் பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிப்பெண்களாக செல்வது குறைக்கப்பட்டு வந்தது.

எனினும், அண்மைக்காலத்தில் அதன் எண்ணிக்கை 16 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் கவர்ச்சியான சம்பளமே இதற்கு அடிப்படைக் காரணம் எனவும் அறியமுடிகிறது.

No comments:

Post a comment