அரச இலக்கிய விருது வழங்கல் - 2019 - sonakar.com

Post Top Ad

Monday 7 January 2019

அரச இலக்கிய விருது வழங்கல் - 2019


2019 அரச இலக்கிய விருது வழங்கலுக்கு நூல்களை பெற்றுக்கொள்ளல் ஆரம்பம்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும்; அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பாக இலங்கை எழுத்தாளர்களுக்கும் மற்றும் நூல் வெளியீட்டாளர்களுக்கும் இவ்வறிவித்தல் விடுக்கப்படுகின்றது.  



மதிப்பீட்டுக்காக 2018 ஆம் வருடத்தில் தேசிய சுவடிகள் காப்பகத்தில் முதற்பதிப்பு என பதிவு செய்யப்பட்ட அனைத்து நூல்களும் கவனத்திற்கொள்ளப்படும். இந்த மதிப்பீட்டுச் செயன்முறையை மிகவு முறையாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் மேற்கொள்ளும் முகமாக எழுத்தாளர்களுக்கும் நூல் வெளியீட்டாளர்களுக்கும் நேரடியாக நூல்களை ஒப்படைக்க சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு கலாசார அலுவல்கள் திணைக்களமும் அரச இலக்கிய ஆலோசனைக் குழுவும் தீர்மானித்துள்ளன.

சுய நாவல், சுய சிறுகதைத் தொகுப்பு, சுய கவிதைப் படைப்பு, சுய இளையோர் இலக்கிய, படைப்பு, சுய பாடலாக்கத் தொகுப்பு, சுய நாடகம், சுய அறிவியல் படைப்பு, சிறுவர் இலக்கிய படைப்பு (16 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்), சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு, நானாவித விடய நூல்கள் (சமூகவியல், மானியடவியல் மற்றும்  மொழிபெயர்ப்பு), மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு, மொழிபெயர்ப்பு  கவிதை படைப்பு, மொழிபெயர்ப்பு  நாடகம், மொழிபெயர்ப்பு - புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு  எனும் தலைப்புகளில் நூல்கள் மதிப்பீடு செய்யப்படும். அதனடிப்படையில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட, 48 பக்கங்களுக்கு குறையாத, ஒரு நூலின் மூன்று (3) பிரதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

சமர்ப்பிக்கப்பட வேண்டிய நூல்களை 'அரச இலக்கிய விழா ஏற்பாட்டு பிரிவு, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல' என்ற முகவரிக்கு கிடைக்கக்கூடியதாக பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஒப்படைக்கலாம். நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் தினம் 2019 பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆகும்.

இது தொடர்பாக தேவையான தகவல்களை 011-2872030 அல்லது 011-2872031 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்.

கலாசார அலுவல்கள் பணிப்பாளர்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
8ம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல.

-S. NESHAN

No comments:

Post a Comment