அடுத்தது மைத்ரிக்கு எதிராக நடவடிக்கை: JVP எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Monday, 3 December 2018

அடுத்தது மைத்ரிக்கு எதிராக நடவடிக்கை: JVP எச்சரிக்கை!ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மக்கள் உரிமைகளோடு இனியும் விளையாடாமல் பொறுப்புள்ள நபராக செயற்பட்டு உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு அவர் விடுத்த உத்தரவை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது ஜே.வி.பி.அத்துடன், அவர் நியமித்த பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசாங்கம் என அனைத்துக்கும் எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் மக்க்ளோடு விளையாடாது, அரசியல் சட்டங்களை கேலிக்கூத்தாக்காது ஜனநாயக ரீதியாக செயற்பட வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவது கட்டாயமாகும் எனவும் அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தமை ஜனநாயகத்துக்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியென தெரிவித்துள்ள அவர், அரசியல் சூழ்ச்சியை முழுமையாக விசாரிக்கவல்ல நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment