ஒன்பது மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்: வஜிர - sonakar.com

Post Top Ad

Saturday, 22 December 2018

ஒன்பது மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்: வஜிர


ஒன்பது மாகாண சபைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒரே நேரத்தில் தேர்தலை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் வஜிர அபேவர்தன.


ஏலவே இழுபறிக்குள்ளாகியுள்ள மாகாண சபை தேர்தல்களை இனியும் தாமதிக்காது விரைவில் நடாத்தப்போவதாகவும் முன்னைய காலம் போன்று தனித்தனியாக தேர்தலை நடாத்தி மக்கள் பணத்தை வீணடிக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார்.

மூன்றரை வருட ஆட்சிக்காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி இது போன்று பல சாதனைப் பேச்சுக்களை பேசி வந்த நிலையில் திடீரென ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டு மீண்டும் நீதிமன்ற தலையீட்டில் உயிர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment