அரசியல் ஒற்றுமை: சாத்தியப்படுத்தினால் சாதிக்கலாம்! - sonakar.com

Post Top Ad

Saturday 22 December 2018

அரசியல் ஒற்றுமை: சாத்தியப்படுத்தினால் சாதிக்கலாம்!


மழை விட்டும் தூரல் ஓயாததைப் போல பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்ரமிங்கவை கடந்த ஒக்டோபர் 26ஆம திகதி  பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது முதல் டிசம்பர் 13ஆம் திகதி உயர் நீதி மன்றத்தின் தீர்;வு வெளியான நாள் வரை தொடர்ந்த  அதிகார இழுபறி இன்னும் முடிவுக்கு வராதிருப்பதை அவதானிக்க முடிகிறது.

19வது அரசியலமைப்புத் திருத்தின் பிரகாரம்; யார் பிரதமர், யாரார் அமைச்சுக்களின் உத்தியோகபூர்வ அமைச்சர்கள் என்ற கேள்விகள் பல்வேறு தரப்புக்களிலிமிருந்து எழு வாரங்களாக எழுப்பப்பட்டு வந்த நிலையில்தான் டிசம்பர் 3ஆம் திகதி பிரதமராகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதி மன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியது.

உயர் நீதி மன்றத்தினால் டிசம்பர் 3ஆம் திகதி மற்றும் 13ஆம் திகதி ஆகிய தினங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் பின்னணியில் ஒக்டோபர் 26ஆம் திகதியிலிருந்து  52 நாட்கள் பிரதமராகப் பதவி விகித்த மஹிந்த ராஜபக்ஷ 'நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறாமல் தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிப்பதற்கு  நான் விரும்பவில்லை. அத்தோடு, புதிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையிலேயே நான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாகத் தெரிவு கடந்த சனிக்கிழமை அவர்; பதவியை ராஜினமா செய்தார்.

மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்த கையோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை  ரணில் விக்ரமசிங்க பிரதமாராக மீண்டும் நியமனம் பெற்றார். அத்துடன்,; கடந்த வியாழக்கிழமை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் நியமிக்கப்படடனர். இருந்தும் ஐக்கிய தேசிய முன்னணியினால் அமைச்சர்களாக பிரேரிக்கப்பட்ட சிலருக்கு அமைச்சுப் பதவி வழங்குவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளதன் மூலம் அரசியல் அதிகார இழுபறி மழைத் தூரலாகவே உள்ளது என்பதை உணர முடிகிறது.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற அதிகாரச் சிக்கல் நிலையும் தோன்றியிருக்கிறது. இது குறித்தான வாதப் பிரதிவாதங்கள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் சூடு பிடித்திருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கிலும் , தென்னிலங்கையில் பலமாக விமர்சிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. 

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  அமைச்சரவையில்; சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில அகில இலங்கi மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியூடீன்,  ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய காங்கிரஸின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகிய சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர்கள் முன்னர் வகித்த அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமான அமைச்சுக்களும் வழங்கப்பட்டுள்ளன. 


பாராளுமன்றத்தின் கௌரவத்தையும், அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான ஆதரவையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததுடன் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிசிங்கவுக்கான பெறும்பான்மை ஆதரவுக்காக வாக்களித்து ரணியில் விக்கிரமசிங்க பிரதமராகுவதற்கு பங்களிப்பு வழங்கியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து அமைச்சர்களாக பதவி வகிக்காவிடியும் மீள்குடியேற்றம், புனரமைப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுக்கள் வேறு எவரும் பொறுப்பேற்காது பிரதமர் ரணில் விக்கரமசிங்க பொறுப்பேற்றுள்ளமை தமிழ் தேசிக் கூட்டமைப்பின் சாணக்கிய அரசியல் காய்நகர்த்தல் என தற்போது அரசியல் பரப்பில் பேசப்படுகிறது. 

இந்நிலையில்,  இப்பாராளுமன்றக் காலம் நிறைவடைவதற்கு எஞ்சியிருக்கும் ஒன்றறை வருட காலத்திற்குள் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் நீண்ட கால மற்றும் சமகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக என்ற சந்தேகத்தினுடனான கேள்விக்கு மத்தியல் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் அலரிமாளிகையில் கடந்த ஞாயிற்றுக்கிமை ஆற்றியுரையில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும நோக்கில் தமிழ்  தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி தீர்வு காண முயற்சிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சிக்குள் அனைவருக்கும் அரசியல் தீர்வு காண்பேன் என்றும் தெரிவித்திருக்கும் இச்சந்தர்ப்த்தில் சிறுபான்மை அரசியல் கட்சித் தலைமைகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் நலன் கருதி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகைளத் தீர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக இக்காலக்களைப் பயன்படுத்துவதற்கு  ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

ஐக்கியமும் அரசியல் செயற்பாடுகளும்

இந்நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் சமத்துவத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே அனைத்து இனத்தையும் சார்ந்த சமாதான விருப்பிகளின் நிலைப்பாடாகும். அதற்;கு வழிவிட வேண்டியது இந்நாட்டை ஆளும் அரசாங்கமாகும். ஓரினத்தின் உரிமைகளை கேள்விக் குறியாக்கி மற்றுமொரு இனம்; மாத்திரம் உரிமைகளையும,; சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கங்கள் வழிவிடுவதும் என்ற சிந்தனைப்போக்குகளும், செயற்பாடுகளும் கடந்த காலங்களில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியமையை பல சம்பவங்களும், அனுபவங்களும் இன்னும் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றன.

இச்சூழலில்;, ஓர் இனத்தின் உரிமைகளும், சுதந்திரங்களும், தனித்துவ  மத சட்டதிட்டங்களும், கலாசார, பண்பாட்டு, விழுமியங்களும் அவ்வப்போது  கேள்விக்குட்படுத்தப்படடுகின்றபோது, அச்சந்தர்ப்பங்களில் அவற்றைப் பாதுகாக்க அவ்வினத்தின் அரசியல், ஆண்மீக, மற்றும் சிவில் சமூகங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டியது அவசியமாகும். இவற்றில் அதிகளவு பங்களிப்புச் செய்ய வேண்டியவர்கள் அவ்வினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளாகும்.  தற்கால அரசியல் சூழல் அதற்கான காலத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். 

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசியல் யுகம் இந்நாட்டில் மலர்ந்தமை குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் சந்தோஷப் பெருமூச்சியை விடச் செய்தது. பல்வேறு எதிர்பார்ப்புக்களை எதிர்பார்க்கச் செய்தது. சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்;வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. அந்நம்பிக்கை கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி கேள்விக்குற்படுத்தப்பட்டது. நம்பிக்கையை இழக்கச் செய்தது. இருப்பினும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை பிரத்திநிதித்துவப் படுத்துர்ம்; சிறுபான்மைக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் இந்த ஒன்றை வருடம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு   சிறுபான்மையின் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய காலத்தின் தேவையாகவுள்ளது என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

ஏனெனில் பகலில் ஒன்று நடந்தால் இரவில் என்ன நடக்கும் என்றதொரு அரசியல் சூழலில் கடந்த 52 நாட்களாக நிலவியது உண்மை. இருப்பினும்,;  ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி சிறுபான்மை கட்சிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியது என ஜனநாயகத்தை நேசிக்கின்ற மக்கள் கூறியதை கேட்க முடிந்தது. இந்நிலையில்தான், சிறுபான்மைக் கட்சிகள் தங்களுக்குள் ஒன்றுபட்டு செயற்படுகின்ற சூழலை உருவாக்கி அவற்றை சாதாமாக்கினால் சிறுபான்மை சமூகம்; எதிர்நோக்கும் பிரச்சினைகள், எழுகின்றன பிரச்சினைகள் மற்றும்   சவால்களை ஐக்கியப்பட்ட அரசியல் செயற்பாட்டினால்  சாதிக்கலாம் என மக்கள் மத்தியில் பேசப்படுவதை பதிய வேண்டியுள்ளது. 

சிறுபான்மை சமூகமும் பிரச்சினைகளும்

இந்நாட்டின் மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய 30 வீதமானவர்கள் சிறுபான்மை சமூகங்களாகும். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலும் அத்துடன் நாட்டின் ஏனைய பிராந்தியங்களிலும் வாழும் சிறுபான்மை சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் நீண்ட கால. சமகால மற்றம் அடிப்படைப பிரச்சினைகளுடன் அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

இந்நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கங்கள் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதியளித்தாலும் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. குறிப்பாக இந்நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை. சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள் மீதான ஆதிக்கம் குறையவில்லை. இவ்வாறு தொடரும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் நாளை எதிர்வு கூறவும் முடியாது. 

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களில் விதவைகள் முதல் தொழில் வாய்ப்பற்ற இளைஞர்கள் வரை, கவனிப்பாறட்ட முதியோர் முதல் மாற்றுத்திறனாளிச் சிறுவர்கள் வரை பல்வேறு சிரமங்களையும், சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 

அத்துடன் பரம்பரை பரம்பரையாக வாழ்;ந்து வாழ்ந்த காணிகள் அரச படைகளினால் கைப்பற்றியிருந்த நிலையில்  அக்காணிகளை மீட்டெடுக்கவும், காணமல்போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கண்டு பிடித்துத் தர வேண்டுமெனவும்,; சிறையில் வாடும் இளைஞர்களை விடுக்கக் கோரியும் வடக்கில் தொடர் போராட்டங்கள் இடம்பெறுவதையும் காண முடிகிறது. 

இவ்வாறுதான் மலையக மக்களும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் வாழ்வதற்கான வசதியுள்ள வீடு முதல்  கல்விக்கான முறையான வாய்ப்பு வரை பல்வேறு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். தற்காலத்தில் அடிப்படைச் சம்பளத்தை 1000வாக அதிகரிக்ககச்கோரி மலையகத்தில் ஆரம்பித்த போராட்டம் தலைநகர் கொழும்பு வரை வியாபித்திருக்கிறது. தமது மலையக உறவுகளுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி இரு மலையக இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாகும்விரையான உணவு தவிர்ப்புப் போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும்  வாழும்  முஸ்லிம்ளும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். கல்விப் பிரச்சினை முதல் காணிப்பிரச்சினை வரை முஸ்லிம் சமூகம்; எதிர்நோக்கும் இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. குறிப்பாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களும், கிழக்கில் வாழும் முஸ்லிம்களும் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதைக் காண முடிகிறது. அத்துடன் நீண்ட கால பிரச்சினைகள் தொடர்பிலும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ் பேசும் சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் சந்தர்ப்பங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஐக்கிய தேசிய  முன்னணியில் அங்கம் விகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ் முற்போக்கு முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்டிருக்கிறது.

தமக்கு வாக்களித்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறவும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும்  சிறுபான்மை அரசியல் தலைமைகளின் ஐக்கியப்பட்ட அரசியல் நகர்வு இன்றியமையாததாகும். இந்த நகர்வுக்கான யோசனை அண்மையில் குருநகாலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் தற்போதைய நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்pனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை சிறுபான்மைக் கட்சிகளின் அரசியல் பரப்பில் வரவேற்வைப் பெற்றிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். இருப்பினும், இந்நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனங்களையும் பதிய வேண்டியுள்ளது.
.
மு.காவின் அழைப்பும் ஆதரவும்

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாகச் செயற்பட வேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக மு.காவின் தலைவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

மு.கா. தலைவரின் இவ்வழைப்பு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சிறுபான்மை கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவது குறித்து முன்வைத்திருக்கும் யோசனை வரவேற்கத்தக்கது, நமது அனைத்து நடவடிக்கைகளையும் ஒற்றுமையாக ஓரணியிலிருந்து முன்னெடுப்பது சிறந்தது. அத்தோடு தேசிய ரீதியில் ஒற்றுமையான செயற்பாடுகளே வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது. நாட்டின் சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினாகள்; ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கான சரியான நேரம் தற்போது ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனும் மு.கா. தலைவரின் அழைப்புக் சாதகமான கருத்தை ஊடகங்களுக்குத் தெரிவிருந்த நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் நிலவும் பிராந்தியப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது அவசியமாகும். இதற்கு  தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே காணப்படும் பிராந்திய மற்றும் நிர்வாக முரண்பாடுகள் முதலில் களையப்பட்டு இரு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை கட்டியெழுப்பட வேண்டும். இருப்பினும், இரு சமூகத்திலுமுள்ள ஒரு சிலர் தங்களது நலன்களை வெற்றிகொள்வதற்காக புதைத்த மலத்தை தோண்றுவது போன்று கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இச்செயற்பாடுகள் தமிழ் முஸ்லிம் உறவுக்கு ஆரோக்கியமாக அமையாது. ஒரு சில அதிகாரிகளும் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக கூறப்படுகிறது.

பிரச்சினைகளும் சாதித்தலும்

இலங்கையை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மேற்குல ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு, இந்நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்திட செய்த இந்நாட்டுபட்டாளர்கள்; இன, மத, மொழி பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு சுதந்திரத்துக்காகப் போராடியதன் பயனாகவே இந்நாடு சுதந்திரம் பெற்றது. சுதந்திர இலங்கை உருவாகுவதற்கும் ஒற்றுமையே பேராயுதமாக அன்று பயன்படுத்தப்பட்டது.

இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகமான தமிழ் பேசும் சமூகங்கள்; தங்களது உரிமைகளை தாங்கள் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்று அன்று கோரியபோது, அவற்றை வழங்க மறுத்த அன்றைய சிங்கள ஆட்சியாளரின் விரும்பத்தகாத நடவடிக்கைள் ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகரச் செய்த வரலாறு நம்முன் உள்ளது.
சிறுபான்மையினமான தமிழ் சமூகத்தின் உரிமைப் போராட்டத்துக்கு தீர்வு 

கிடைக்கப்பெறாத நிலையில் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தின் மீதும் கிறிஸ்தவ சமூகத்தின் மீதும்; பேரினவாதத்தின் கழுகுப் பார்வை திருப்பப்பட்டதையும் நாம் அறிவோம்.

இந்நிலையில்தான சிறுபான்மை சமூகங்களுக்கிடையே ஒற்றுமையின் அவசியம் உணரப்படவேண்டியதொன்றாக நோக்கப்படுகிறது. எதிர்கால சிறுபான்மை சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமாயின் இரு சமூகத்திற்கும் பொதுவான விடயங்களில் இரு சமூகத் தலைவர்களும் சிவில் அமைப்புக்களும் வேஷம் போடுவதை நிறுத்தி, வஞ்சம் தீர்ப்பதை மறந்து ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின்  நலனை நிறைவேற்றுவதற்காக செயற்படும் மனப்பாங்கை ஏற்படுத்தி ஒற்றுமைப்படுவது அவசியமாகவுள்ளது. 

இந்த அவசியத்திற்கான மாற்றம் இரு சமூகங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு ஆட்சி மாற்றத்திற்காக வாக்குகளைப் பயன்படுத்திய தமிழ் பேசும் சமூகம் தங்களுக்குள்ள பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வை உரியவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுவதற்காகவும் ஒன்றுபடுவது அவசியம.; இதற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பை அரசியல் தலைமைகள் கொண்டிருக்கின்றன. அரசியல் தலைமைகளின் இதய சுத்தியான, சுயநலன்களுக்கப்பாலான செயற்பாடுகள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் தேசிய மற்றும் பிராந்திய ரீதியிலான் நீண்ட கால, சமகால அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு வழிவகுக்கும்.

பாராளுமன்ற ஆயுட்காலம் முடிவடைய இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ளன. இந்நிலையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிலும் சிறுபான்மை அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த  தங்களது சமூகம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை அரசியல் அதிகாரங்களினூடாக தீர்த்துக் கொள்வதற்கு சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியத்தை சாத்தியப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்தால் தமிழ் , முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெற்றி கொள்வதுடன் சவால்;களையும் சாதிக்கலாம் என்பதே காலத்தின அறைகூவலாகக் காணப்படுகிறது.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment