மாவனல்லை: மேலும் 'அடிப்படைவாதம்' உருவாவதைத் தடுக்க வேண்டும்: அமீர் அலி - sonakar.com

Post Top Ad

Sunday, 30 December 2018

மாவனல்லை: மேலும் 'அடிப்படைவாதம்' உருவாவதைத் தடுக்க வேண்டும்: அமீர் அலி


மாவன்லையில் புத்தர் சிலை உடைத்தவர்கள் தண்டிக்கப்படும் அதேவேளை, மேலும் இவ்வாறான சிந்தனைப் போக்குள்ளவர்கள் உருவாவதைத் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார் பேராசிரியர் கலாநிதி அமீர் அலி.மாவனல்லை பகுதிகளில் புத்தர் சிலைகளை உடைத்தவர்களுக்கும் ஆப்கனிஸ்தானில் அவ்வாறே புத்தர் சிலைகளை உடைத்தவர்களுக்கும் வித்தியாசமில்லையென தெரிவிக்கின்ற அவர், சமூகத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மேலும் அடிப்படைவாதிகள் உருவாவதைத் தடுக்க வழி காண வேண்டும் என தெரிவிக்கிறார்.

மாவனல்லை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஏலவே ஒரு குழுவாக இயங்கி வந்ததாக பிரதேசத்திலிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற அதேவேளை பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், இது திட்டமிட்ட செயல் எனவே பெரும்பாலானோர் கருத்து வெளியிடுகின்ற அதேவேளை இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன வன்முறையைத் தூண்டவும் சில சக்திகள் காத்திருப்பது தொடர்பில் முற்போக்கு சிங்கள இணையத்தளங்கள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

1 comment:

Post a comment