வன்முறையைத் தூண்டக் காத்திருக்கும் லொஹான் - திலும்: சிங்கள ஊடகங்கள் எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Saturday, 29 December 2018

வன்முறையைத் தூண்டக் காத்திருக்கும் லொஹான் - திலும்: சிங்கள ஊடகங்கள் எச்சரிக்கை!


கண்டி, திகன பகுதியில் ஏற்படுத்தியது போன்று நாட்டில் மீண்டும் இனவாத வன்முறையைத் தூண்டுவதற்கு லொஹான் ரத்வத்தை மற்றும் திலும் அமுனுகம காத்திருப்பதாக பல சிங்கள தளங்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.


கண்டி வன்முறையின் சூத்திரதாரிகள் மேற்கூறிய இருவருமே என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் லண்டன் சென்றிருந்த நிலையில் அங்கு முஸ்லிம்களுடனான சந்திப்பில் வைத்து தெளிவுபடுத்தியிருந்ததார். இதனை சோனகர்.கொம் அப்போதே வெளியிட்டிருந்தது. 

எனினும், சட்டத்தின் பிடியிலிருந்து இருவரும் தொடர்ந்தும் தப்பியுள்ளதோடு அமித் வீரசிங்க குழு நீண்ட நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவனல்லை சம்பவத்தின் சூத்திரதாரிகளும் இவர்களாகவே இருக்கக் கூடும் என சில மிதவாத சிங்கள இணையங்கள் தகவல் வெளியிட்டுள்ள அதேவேளை, ஒரு சில தளங்களில் இவர்களிருவரின் தூண்டுதலிலேயே சிலை உடைப்புகள் இடம்பெற்றதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மஹிந்த அணி இனவாத வன்முறையொன்றின் ஊடாக மீண்டும் பௌத்த பேரினவாதத்தை நிறுவ முயற்சிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றமையும் ஜனாதிபதியே தற்போது சட்ட - ஒழுங்கு அமைச்சராகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment