50 நாள் அரசின் நிதி விவகாரம்: அறிக்கை கோரும் ரணில்! - sonakar.com

Post Top Ad

Saturday 29 December 2018

50 நாள் அரசின் நிதி விவகாரம்: அறிக்கை கோரும் ரணில்!


மஹிந்த ராஜபக்ச சட்டவிரோத பிரதமராக நியமிக்கப்பட்டு ஆட்சியதிகாரத்தைப் பெற்றிருந்த நிலையில் அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள், குறிப்பாக நிதி விவகாரங்கள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.



நிதியமைச்சு உட்பட பொருளாதார விவகாங்களுடன் தொடர்புள்ள அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் இவ்வாறு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

2015க்கு முற்பட்ட மஹிந்த ஆட்சியின் ஊழல்களுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத் தரப் போவதாக வாக்குறுதியளித்து மூன்றரை வருடங்களின் பின் ஆட்சியதிகாரத்தையும் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக இழந்திருந்தமையும், இதுவரை  கடந்த கால வாக்குறுதிகளுக்கமைய ஐ.தே.க அரசு எதையும் நிரூபிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment