அல்-குர்ஆனைக் கற்றுக்கொள்ளுங்கள்: ஞானசாரவுக்கு அறிவுரை! - sonakar.com

Post Top Ad

Saturday, 22 December 2018

அல்-குர்ஆனைக் கற்றுக்கொள்ளுங்கள்: ஞானசாரவுக்கு அறிவுரை!


தற்போது தாடி வளர்த்துள்ள நீங்கள் அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பையும் கற்றுக்கொண்டால் பயனடையலாம் என ஞானசாரவுக்கு இன்று அறிவுரை வழங்கியுள்ளனர் முஸ்லிம் சமூக பிரதிநிதிகள்.

அண்மைக்காலத்தில் தனது தீவிரவாத போக்கைக் கைவிட்டு, நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் முஸ்லிம் சமூகம் தொடர்பான தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஞானசார ஈடுபட்டிருந்தார். தற்போதைய அமைச்சர் ஒருவரின் முன்னெடுப்பில் இடம்பெற்ற நான்கு கட்ட சந்திப்பின் பயனாக ஞானசாரவின் தீவிர போக்கு தணிந்ததாக நம்பப்படுகிறது.இந்நிலையில், தற்போது மிகவும் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசாரவை இன்றைய தினம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில் அஷ்ஷெய்க் பாசில் பாரூக் , தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி, , ஹில்மி அஹமட் (MCSL ), ரசூல்டீன்  உட்பட்ட குழுவினர் சந்தித்து நலம் விசாரித்திருந்த நிலையிலேயே அவர் அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பையும் வாசித்து அல்-குர்ஆனில் கூறப்பட்டுள்ள விடயங்களை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

2012 - 2017 வரை தீவிர முஸ்லிம் எதிர்ப்பாளராக இயங்கி வந்த ஞானசார, தற்சமயம் பல கட்ட பேச்சுவார்த்தைகளின் பின் புரிந்துணர்வை வளர்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment