புதிய பிரதமர் கோரும் 'பிரேரணை'யை பின் போட்ட ஐ.தே.க - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 December 2018

புதிய பிரதமர் கோரும் 'பிரேரணை'யை பின் போட்ட ஐ.தே.க


மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கக் கோரும் பிரேரணையொன்றை நிறைவேற்றி அதனூடாக கோரிக்கை விடுக்கும் படி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்திருநு;தார்.இந்நிலையில், இன்று அப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சபை அமர்வின் போது அதனை வேறு ஒரு நாள் சமர்ப்பிக்கப் போவதாகவும் இன்று விலக்கிக் கொள்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தது.

ஒக்டோபர் 26, மைத்ரிபால சிறிசேன நியமித்த பிரதமர் மற்றும் அரசாங்கம் இயங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதன் பின்னணியில் பிரேரணையும் பின்போடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

No comments:

Post a comment