அரசியல் சர்ச்சை: பசில் - மைத்ரி மந்திராலோசனை! - sonakar.com

Post Top Ad

Monday 3 December 2018

அரசியல் சர்ச்சை: பசில் - மைத்ரி மந்திராலோசனை!

Maithri-Basil agree to contest under common symbol

மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பது பல தடவைகள் நிரூபணமாகியுள்ள நிலையிலும் தான் எடுத்த முடிவை நியாயப்படுத்த முனைந்து கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேற்றிரவு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் ஒரு மணி நேர மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளார்.



அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியுற்றதும் மனைவியோடு இரவோடிரவாக நாட்டை விட்டு வெளியேறியவறாவார். இந்நிலையில், நாட்டில்  தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பில் இருவரும் தீவிரமாக கலந்துரையாடியுள்ளதாக அறயமுடிகிறது.

மஹிந்த ராஜபக்ச, தனது புதல்வர் நாமலுக்கு 35 வயது பூர்த்தியாகும் வரை அரசியலில் தொடர விரும்புகின்ற அதேவேளை பசில் - கோத்தா தமக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளும் நிமித்தம் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடவும் தயாராக இருக்கின்றமையும் நாமலே தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment