வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றுக்கு அதிகாரமில்லை: ச.மா. அதிபர்! - sonakar.com

Post Top Ad

Wednesday 5 December 2018

வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றுக்கு அதிகாரமில்லை: ச.மா. அதிபர்!


ஜனாதிபதி அரசியல் சட்டவிதிகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையிலான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றுக்கு அதிகாரமில்லையென வாதிட்டுள்ளார் சட்டமா அதிபர்.



ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் நாடாளுமன்றமே நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் உச்ச நீதிமன்றில் அது தொடர்பில் வழக்கு விசாரணை நடாத்த முடியாது எனவும் தெரிவிக்கின்ற அவர் அரசியல் சட்டத்தின் 38 (2) இது தொடர்பில் தெளிவாக வழிகாட்டியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

இதனடிப்படையில், ஜனாதிபதியின் விதி மீறல் பிரேரணையாக நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரே அதனை உச்ச நீதிமன்றுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அதன் பின் உச்ச நீதிமன்றம் அது தொடர்பில் விசாரணை நடாத்தி சபாநாயகருக்கே அறிக்கை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் நடவடிக்கையை நாடாளுமன்றிலேயே சவாலுக்குட்படுத்த முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், வழக்கு விசாரணை இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment