2007 இலிருந்து மத்திய வங்கியில் 1000 பில்லியன் 'மோசடி': மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

2007 இலிருந்து மத்திய வங்கியில் 1000 பில்லியன் 'மோசடி': மைத்ரி!


மத்திய வங்கி ஊழல் தொடர்பில் தன் வசம் இருக்கும் ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம் 2007ம் ஆண்டிலிருந்து பில்லியன்களில் மோசடி இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.சுமார் 1000 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான மோசடி இடம்பெற்றுள்ள போதிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஒத்துழையாமையால் திருடர்களைப் பிடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் மைத்ரி இன்று நிகழ்த்திய விசேட உரையின் போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூட எடுத்து செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க இதற்கான தீர்வொன்றைக் காண்பதற்கு கடந்த காலத்தில் ஒத்துழைக்கவில்லையென அவர் நேரடியாகவே குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தான் நன்றி மறவாத நிலைப்பாட்டால் அர்ஜுன மகேந்திரன் நியமனம் முதல் பல்வேறு விடயங்களில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment