சு.க MPக்களுக்கு மைத்ரி வழங்கிய 'செல்ல' அறிவுரை! - sonakar.com

Post Top Ad

Saturday, 17 November 2018

சு.க MPக்களுக்கு மைத்ரி வழங்கிய 'செல்ல' அறிவுரை!இனி வரும் காலத்தில் நாடாளுமன்றில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு செல்லமாக அறிவரை வழங்கியுள்ளார் மைத்ரிபால சிறிசேன.இது வரை இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் சு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை அவர் கண்டிக்கவில்லையென கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதுடன் இனி வரும் நாட்களில் சற்று ஒழுக்கமான நடந்து கொள்ளுமாறு தெரிவித்ததாக நேற்றிரவு ஜனாதிபதியின் சந்திப்பின் பின் செய்தியாளர்களுடன் உரையாடிய பிரசன்ன ரணவீர தெரிவித்திருந்தார்.

சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சு.கட்சி உறுப்பினர்கள் அடாவடியில் ஈடுபட்டதுடன் மிளகாய்த் தூள் வீசல், நாற்காலிகளை உடைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் சபாநாயகரின் பாதுகாப்பு அணியினரையும் ஆக்ரோசமாக தாக்கியிருந்தனர். எனினும், ஜனாதிபதிய எவ்விதத்திலும் தம்மைக் கண்டிக்கவில்லையெனவும் மாறாக செல்லமாக அறிவுரை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment