
நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் ஒழுங்கின்படி முறையாக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பித்து அதன் மூலம் தன்னைத் தோற்கடித்தால் தான் பதவி விலகத் தயார் என்கிறார் மஹிந்த ராஜபக்ச.
நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்க 12 கட்ட ஒழுங்கு முறைகள் இருப்பதாகவும் அதனை ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றவில்லையெனவும் மஹிந்தவின் செயலாளர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைக்கு ஒரே தீர்வு தேர்தல் ஒன்றை நடாத்துவதுதான் என அவர் தெரிவிக்கின்ற அதேவேளை, நாடாளுமன்றிலேயே இத்தனை காடைத்தனமாக நடந்து கொள்வோரின் கீழ் நியாயமான தேர்தல் ஒன்று நடைபெறாது என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment