ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் JVP - பெரமுன முறுகல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 November 2018

ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் JVP - பெரமுன முறுகல்!


ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் இன்றைய (29) கூட்டம் அமளி துமளியுடன் நிறைவுற்றிருந்தது.


ஜே.வி.பி உறுப்பினர்கள் தமது அமைப்பின் தலைவர்களைக் கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு முட்டுக்கொடுப்பதாக பெரமுன உறுப்பினர்கள் கிண்டலடித்ததன் பின்னணியில் உருவான தர்க்கம் அமளியாக மாறியிருந்தது.

பிரதேச சபையின் தலைவர் ஆனந்த ஜயவிலால் தலைமையில் சபை அமர்வு இடம்பெற்ற நிலையில் இவ்வாறு முறுகல் நிலை தோன்றியிருந்தது. இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியினர் வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-மொஹொமட் ஆஸிக்

No comments:

Post a comment