
மத்திய வங்கி பிணை முறி மோசடி ஊழல் விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் விமல் வீரவன்ச.
ழுக்கிய தேசியக் கட்சி மீது பாரிய கரும்புள்ளியாக உருவான குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அணைக்குழு விசாரணை நடாத்தப்பட்டிருந்த போதிலும் அதன் ழுழுமையான அறிக்கை வெளியிடப்படவில்லையெனவும் பக்கங்கள் காணாமல் போயுள்ளதாகவும் பல்வேறு ஊகங்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கியிருந்தன.
இந்நிலையிலேயே தற்போது மைத்ரியின் நண்பராக மாறியுள்ள விமல் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமையும் ரணிலின் நண்பர் அர்ஜுன் மகேந்திரன் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment