
ரணில் விக்கிரமசிங்க, பிரதமருக்குரிய அதிகாரங்களை மாத்திரமன்றி தனது அதிகாரங்களையும் பயன்படுத்தியதாகவும் அதன் மூலம் ஜனாதிபதியின் இருப்பு கேலிக்கூத்தானதாகவும் தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.
இந்நிலையில், தான் ஒரு போதும் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப் போவதில்லையென்பதில் திடமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தனக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லையாயின் அதற்கேற்ப தானாக முடிவொன்றை எடுப்பார் எனவும் மைத்ரி ஞாயிறு ஆங்கில பத்திரிகையொன்றுடனான பேட்டியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment