
இருவரின் (மைத்ரி - மஹிந்த) பதவி வெறிக்கு நாடு பலியாகி, ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தின் பின் சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கையில் இடம்பெற்றுள்ள அரசியல் சூழ்ச்சியை முறியடிக்கப்பட்டு ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்றம் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசொன்றை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் இரு தேர்தல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் ஊடாகவே நாடு நிர்வகிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment