முல்லைத்தீவு முஸ்லிம்கள்: வரலாறும் வாழ்வியலும்” நூல் வெளியீடு - sonakar.com

Post Top Ad

Friday 9 November 2018

முல்லைத்தீவு முஸ்லிம்கள்: வரலாறும் வாழ்வியலும்” நூல் வெளியீடு



2017 தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த துறைசார்ந்தவர்களால் எழுதப்பட்ட 'முல்லைத்தீவு முஸ்லிம்கள்: வரலாறும் வாழ்வியலும்' எனும் நூல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.



முஹர்ரம் விழாவில் ஓர் அங்கமாக கல்வியியலாளர் முஸ்தபா மஹ்ஸூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவுஇ கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கனகையா தவராசா கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட நிலக் கிளி நாவலாசிரியர் அண்ணாமலை பாலமனோகரன் நூல் ஆய்வுரையை வழங்கினார்.

இதன்போது தேசிய மீலாத் வழிநடத்தல் குழுவின் தலைவர் ஏ.எல். ஹல்லாஜ் நூலாக்க குழுவினர் முன்னிலையில் அதிதிகளுக்கு நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

-Jemsith Azeez

No comments:

Post a Comment