நாட்டைக் காக்க புதிய கூட்டணி: ரணில்! - sonakar.com

Post Top Ad

Monday, 12 November 2018

நாட்டைக் காக்க புதிய கூட்டணி: ரணில்!


நாட்டைப் பாதுகாக்க ஐக்கிய தேசிய முன்னணி புதிய கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் பலவந்தமாக பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.ஜனநாயக விரோதமாக சர்வாதிகாரம் புரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதில் தமது பங்காளிக் கட்சிகள் அனைத்தும் தெளிவாக இருப்பதாக தெரிவிக்கின்ற அவர், தற்சமயம் நாட்டில் நிலவும் சூழ்நிலை மிகவும் ஆபத்தானது எனவும் எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம் உச்ச நீதிமன்றில் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment