பிரதமர் பதவியை நிராகரித்த சஜித்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Monday, 5 November 2018

பிரதமர் பதவியை நிராகரித்த சஜித்: மைத்ரி!மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க முன்பதாக தான் சஜித் பிரேமதாசவிடமும் கரு ஜயசூரியவிடமும் இது பற்றிக் கேட்டதாகவும் இருவரும் நிராகரித்திருந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் மைத்ரிபால  சிறிசேன.மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதனை நியாயப்படுத்தியுள்ள மைத்ரி,  குறித்த நபர்கள் நிராகரித்தன் பின்னரே தான் மஹிந்தவை அணுகியதாக தெரிவிக்கின்றார்.

சஜித் பிரேமதாசவிடம் இரு மாதங்களுக்கு முன்பாகவே தான் இது பற்றிப் பேசியதாகவும் மைத்ரி தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment