சபாநாயகர் பதவி விலக வேண்டும்: லக்ஷ்மன் யாப்பா - sonakar.com

Post Top Ad

Saturday, 17 November 2018

சபாநாயகர் பதவி விலக வேண்டும்: லக்ஷ்மன் யாப்பா


நாடாளுமன்றைக் கட்டுப்படுத்த முடியாது போனால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என தெரிவிக்கிறார் லக்ஷ்மன் யாப்பா.நாடாளுமன்றில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கான பொறுப்பு சபாநாயகரையே சாரும் என தெரிவிக்கின்ற அவர், இதற்கு முன்னர் கூட்டணி அரசின் அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் கால தாமதத்துக்குள்ளான போதிலும் மஹிந்தவுக்கு எதிரான பிரேரணையை சபாநாயகர் 10 நிமிடங்களுக்குள் நிறைவேற்றிச் சென்றமை அவரது இயலாமையைக் காட்டுவதாகவும் யாப்பா தெரிவிக்கிறார்.

சபாநாயகரை சபைக்குள் நுழைய விடாது மஹிந்த தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பொறுப்பை சபாநாயகரே ஏற்க வேண்டும் என யாப்பா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment