ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் ஆஜர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 November 2018

ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் ஆஜர்



2008 - 2009 காலப்பகுதியில்இ 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதைத் தவிர்த்து வந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன  கோட்டை நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.



குறித்த கடத்தல் சம்பவத்தின் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

தனக்கு உத்தியோகபூர்வ அழைப்பெதுவும் விடுக்கப்படவில்லையென நேற்றைய தினம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமையும் அவரைக் கைது செய்து அழைத்துவருமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment