பத்து மாதத்தில் குர்ஆனை பூரணமாக மனனம் செய்த மாணவன் - sonakar.com

Post Top Ad

Thursday, 1 November 2018

பத்து மாதத்தில் குர்ஆனை பூரணமாக மனனம் செய்த மாணவன்


கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொறுப்பின் கீழுள்ள ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரில் கல்வி கற்றுவரும் மாணவன் முகம்மது ஜஃபர் றஸ்மி அக்ரம் குறுகிய காலத்தில் குர்ஆனை பூரணமாக மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்.பதினெட்டு வயதான இவர் பத்து மாதங்களில் குர்ஆன் முழுவதையும் பூரணமாக மனனம் செய்துள்ளார்.

இவர் காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த முகம்மது ஜஃபர் மற்றும் பூங்கிளி உம்மா தம்பதிகளின் புதல்வராவார்.

நற்குணமும், நற்பண்புமுள்ள குறித்த மாணவனுக்கு கல்லூரியின் அதிபர், நிருவாகத்தினர், மெளலவிமார்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஏனைய மாணவர்கள் போன்றோர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment