
மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக பாரம்பரியமிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்து கொண்டிருப்பதனால் அதனைக் காப்பாற்றி மீளவும் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் செயற்படப் போவதாக புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஸ்ரீலசுட்சி உறுப்பினர்களை நாடி இது குறித்து பேசியுள்ள குறித்த அமைப்பு இன்றைய தினம் மதியம் 2 மணியளவில் கொழும்பு, பொது நூலக கேட்போர் கூடத்தில் இதற்கான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
எனினும், குறித்த நிகழ்வை நடத்தவிடமால் தடுப்பதற்கான முயற்சிகள் கட்சியின் உயர்மட்டத்தில் இடம்பெறுவதாகவும் எவ்வாறாயினும் ஸ்ரீலசுகட்சியின் பாரம்பரியத்தைக் காப்பாற்றப் போராடப் போவதாகவும் குறித்த அமைப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment