
பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரன்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று 24 ம் திகதி மாலை அருகிலுள்ள பாரிய கினறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்தாக பூஜாபிட்டிய பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை 5 மணி அளவில் தனது நன்பர் ஒருவருடன இவர் மீன் பிடிப்பதற்காக இப்பாரிய கினற்றுக்கு அருகே சென்றுள்ளதுடன் அப்போது அவரது நன்பன் நீரிழ் மூழ்கும்போது அவரை காப்பாற்ற முயற்சித்த இச் சிறுவன் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
வலப்பனை நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றின் படி இச் சிறுவன் பூஜாபிட்டிய மொரண்கந்த பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றால் நடாத்தப்படும் சிறுவர் இல்லம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment