திருடர்களுக்கு சட்டத்தைப் பின்பற்றத் தெரியாது: கபீர் சாடல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 November 2018

திருடர்களுக்கு சட்டத்தைப் பின்பற்றத் தெரியாது: கபீர் சாடல்!


எல்லாவற்றையும் திருட்டுத் தனமாகவும் குறுக்குவழியிலும் சாதித்துப் பழகியுள்ள மஹிந்த அணியினருக்கு சட்டத்தைப் பின்பற்றத் தெரியாது எனவும் அது அவர்களுக்குப் பழக்கமில்லாத விடயம் எனவும் சாடியுள்ளார் கபீர் ஹாஷிம்.கடந்த இரு வாரங்களாக நாடாளுமன்றில் தமது பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டும் மஹிந்த தரப்பினரால் அதைச் செய்ய முடியாதுள்ளதாகவும் எல்லாவற்றையும் குறுக்கு வழியில் பெறுவது போன்று அதிகாரத்தையும் கைப்பற்றிக்கொள்ள முயற்சிப்பதாகவும் நேர்வழி இவர்களுக்குப் பழக்கமில்லாத ஒரு விடயம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

இன்றைய தினமும் நாடாளுமன்றில் 123 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மஹிந்த ராஜபக்ச பொது நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment