அரசியல் குழப்பத்துக்கு நாளை தீர்வு? சபாநாயகர் நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 November 2018

அரசியல் குழப்பத்துக்கு நாளை தீர்வு? சபாநாயகர் நம்பிக்கை!


தற்போது நிலவும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காணும் நிமித்தம் நாளைய தினம் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட தரப்பினரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக சபாநாயகரின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து விட்டு வந்த நிலையில் சபாநாயகர் அலுவலகம் இத்தகவலை வெளியிட்டுள்ள அதேவேளை அரசியல் சர்ச்சையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சந்திப்பென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதுடன் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் நாடு நிலை குலைந்திருப்பதாகவும் உடனடி தீர்வு அவசியம் என ஜனாதிபதியிடம் சபாநாயகர் எடுத்துக்கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் நாளைய தினம் மீண்டும் சபை அமர்வு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment