அரசை உடனடியாக கவிழ்ப்பது எப்படி? மஹிந்த அறிவுரை! - sonakar.com

Post Top Ad

Friday, 2 November 2018

அரசை உடனடியாக கவிழ்ப்பது எப்படி? மஹிந்த அறிவுரை!


அரசாங்கத்தை உடனடியாகக் கவிழ்த்து, தேர்தலை நடாத்துவதற்கான இலகுவான வழியொன்று இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவுரை வழங்கியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.


வரவு - செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதே அதுவென விளக்கமளித்துள்ள மஹிந்த, தமது அரசின் முக்கிய எதிர்பார்ப்புகளுள் ஒன்று விரைவில் தேர்தலை சந்திப்பது எனவும், வரவு - செலவுத் திட்டத்துக்கு முன்பான இடைக்கால நிதியொதுக்கீடு தொடர்பிலான வாக்கெடுப்பில் அதனைத் தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், தாம் 2015ல் பெற்ற மக்கள் ஆணையைக் காப்பாற்றவுள்ளதாகவும் மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதம் எனவும் ஐ.தே.க தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment