
மஹிந்த ராஜபக்சவை தான் பிரதமராக நியமித்தமை சட்டரீதியானது என தெரிவித்து வரும் மைத்ரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்பை தற்போது உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
மஹிந்தவின் நேரடி தொடர்புகள் மூலம் இது சாத்தியப்படாதென்பதே யதார்த்தமாக உள்ள நிலையில் பசில் ராஜபக்சவை அப்பொறுப்பிலிருந்து நீக்கி அதற்குப் பகரமாக எஸ்.பி. திசாநாயக்க, திலங்க சுமதிபால மற்றும் லக்ஷ்மன் வசந்த ஆகிய மூவரிடம் இப்பொறுப்பை ஒப்படைத்துள்ளார் மைத்ரி.
முன்னராக தன்னால் நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுத்தர முடியும் என பசில் ராஜபக்ச நம்பிக்கையூட்டியிருந்த நிலையிலேயே பிரதமர் மாற்றம், நாடாளுமன்ற கலைப்பு என அதிரடி நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் பசில் ராஜபக்சவுக்கு விசுவாசமான முஸ்லிம் அமைச்சரும் பயபக்தியுடன் உம்றா செய்யச் சென்று தப்பிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment