வெளிநாட்டு சூழ்ச்சி எதுவுமில்லை: ரணில் - sonakar.com

Post Top Ad

Thursday, 1 November 2018

வெளிநாட்டு சூழ்ச்சி எதுவுமில்லை: ரணில்


தான் அதிரடியாகப் பதவி நீக்கப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு சூழ்ச்சி எதுவும் இல்லையென தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.


ரணில் - மைத்ரி உறவு திடீர் என முடிவுக்கு வந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவின் நியமனம் சட்டவிரோதமா இல்லையா எனும் விவாதம் தொடர்கிறது. எதிர்வரும் 16ம் திகதியே நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில் தற்சமயம் அரசியல் பேரம் நடந்து வருகிறது.

இந்நிலையில், மைத்ரிபால சிறிசேனவின் முடிவின் பின்புலத்தில் வெளிநாடுகள் எதுவும் தொடர்புபடவில்லையென ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment